Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » ஜமா மசூதி

ஜமா மசூதி, லக்னோ

59

மூன்று குமிழ் கோபுரங்கள் மற்றும் இரண்டு தூண் கோபுரங்களுடன் வீற்றிருக்கும் இந்த ஜும்மா மசூதி லக்னோவை ஆண்டா ஆவாத் வம்ச நவாப்புகளின் உன்னதங்களுக்கான சான்றாக காட்சியளிக்கிறது.

நவாப் முஹமது அலி ஷா அப்போது நாட்டிலிருந்த எல்லா மசூதிகளைவிடவும் மிகச்சிறப்பான கலையம்சங்களுடன் ஒரு மசூதியை கட்ட விரும்பினார்.

இருப்பினும் குணப்படுத்த முடியாத மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட அவர் 1842ம் ஆண்டில் இந்த கட்டுமானத்தை முடிக்காமலேயே மரணமடைந்தார். இருப்பினும் அவரது மனைவி பேகம் மல்லிகா ஜெஹான் இதனை சிறப்பாக கட்டி முடித்துள்ளார்.

இந்த பிரம்மாண்ட மசூதி 4950 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்கள், நுணுக்கமான அலங்காரங்கள், சுவற்றில் இடம்பெற்றுள்ள சித்திரப்பொறிப்புகள் மற்றும் வாசகப்பொறிப்புகள் ஆகியவற்றில் ஹிந்து மற்றும் ஜைனக்கோயில்களின் பாதிப்பு காணப்படுகிறது.

இதன் உட்புறச்சுவர்களில் முலாம் பூசிய கண்ணாடிகள், வெள்ளித்தகடுகள், முகலாய பாணி சுவரோவியங்கள் மற்றும் பிரகாசமான சரவிளக்குகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.

அலங்கார வளைவுகளோடு காட்சியளிக்கும் குமிழ் கோபுரங்கள் வெவ்வேறு உயரங்களில் 260 தூண்களின் மீது அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வளாகத்தின் கிழக்குப்பகுதியில் அஹமது ஷா மன்னரின் சமாதியும் இடம் பெற்றுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu