Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » சிகந்தர் பாக்

சிகந்தர் பாக், லக்னோ

59

சிகந்தர் பாக் என்பது அடிப்படையில் ஒரு பூங்கா வளாகத்தை குறிப்பதாக இருந்தாலும் இதன் உள்ளே ஒரு மாளிகையும் இடம் பெற்றுள்ளது. ஆவாத் வம்சத்தின் கடைசி நவாப் ஆன வாஜித் அலி ஷா இதனை கட்டியுள்ளார்.  அவர் இதற்கு தனது மனைவியான சிகந்தர் மஹால் பேகத்தின் பெயரையே சூட்டியுள்ளார்.

நவாப் வாஜித் அலி ஷா ஒரு கலாரசனை மிகுந்த மன்னராக இருந்துள்ளார். இவர் ஒரு அழகிய கலைக்கூடத்தையும் இந்த பூங்காவின் நடுவே அமைத்திருக்கிறார். இந்த கூடத்தில் அவர் ராஸ லீலா, கதக் நடனம் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் வாத்திய இசைக்கருவிகளின் இசைப்பு ஆகியவற்றை விரும்பி ரசித்திருக்கின்றார்.

இருப்பினும் இந்த பூங்கா வளாகம் பின்னாளில் 1857ம் ஆண்டு ஆங்கிலேய ராணுவத்திற்கு எதிராக உருவான கலகத்தில் ஒரு கேந்திரமாக பயன்படுத்தப்பட்டது. லக்னோ முற்றுகையின்போது 2200  இந்திய வீரர்கள் இந்த பூங்காவிலிருந்து செயல்பட்டனர்.

ஆங்கிலேயத்தளபதி சர் காலின் காம்பெல் என்பவரது தலைமையில் ஆங்கிலப்படையினரால் பலர் அப்போது கொல்லப்பட்டனர். தற்போது இந்த சிகந்தர் பாக் தோட்டப்பூங்காவில் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
15 Sep,Tue
Check Out
16 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
15 Sep,Tue
Return On
16 Sep,Wed