ஆர்தர் மேலட் என்ற ஆங்கிலேயரின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மலைக்காட்சி தளம் மஹாபலேஷ்வரிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முதல் முதலாக ஒரு வீட்டை இந்த இடத்தில் ஆர்தர் மேலட் கட்டியதாக அறியப்படுகிறது.
இங்கிருந்து பார்த்தால் தக்காண பீடபூமி மற்றும் கொங்கணப்பிரதேசம் இரண்டின் வித்தியாசமான அம்சங்களை தெளிவாக காணலாம். இடது புறம் சாவித்திரி பள்ளத்தாக்கையும் வலது புறம் மற்றொரரு குறுகிய பள்ளத்தாக்கையும் காணலாம்.
ஆர்தர் மலைக் காட்சி தளத்திற்கு கீழே விண்டோ பாயிண்ட் என்ற மற்றொரு மலைக்காட்சி தளமும் உள்ளது. இங்கிருந்தும் அருமையான இயற்கைக் காட்சிகளை காண முடியும்.



Click it and Unblock the Notifications