மஹாபலேஷ்வர் பகுதியில் இரண்டாவது உயர்ந்த சிகரம் இந்த கன்னாட் சிகரமாகும். மலைகளுக்கிடையில் காணப்படும் இது 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கன்னாட் டியூக் (பிரபு) நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்த சிகரம் ஒலிம்பியா சிகரம் என்றும் அழைக்கப்பட்ட்து.
இந்த சிகரத்திலிருந்து கிருஷ்ணா பள்ளத்தாக்கு மற்றும் வெண்ணா ஏரி இரண்டையும் கண் குளிரப்பார்க்கலாம். அஜிங்கியாதாரா, ராஜ்கர் மற்றும் கமால்கட் போன்ற இடங்களையும் இந்த சிகரத்திலிருந்து பார்க்க முடியும்.
மேலும், கிழக்குப்பக்கம் பஸ்ராணி காட் மற்றும் மேற்குப்பக்கம் பிரதாப்காட் இரண்டையும் இங்கிலிருந்த் தெளிவாக பார்க்கலாம்.தவிர மஹாபலேஷ்வர் பள்ளத்தாக்கு முழுவதும் இங்கிருந்து தெரிவதுடன் இந்த சிகரம் மலையேறிகள், மற்றும் சாகச விரும்பிகளுக்கு மிகவும் தோதான இடமாகும்.



Click it and Unblock the Notifications