பள்ளத்தாக்குகளின் பின்னணியில் சூரியன் அஸ்தமிக்கும் அழகை இந்த காட்சி தளத்திலிருந்து கண்டு களிக்கலாம். சூரியன் அஸ்தமித்து கீழே செல்லும்போது ஆரஞ்சு வண்ண குழம்பாய் காட்சியளிக்கும் அந்த பகுதியின் அழகு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சொக்க வைக்கின்றது என்றே சொல்லலாம்.
இந்த மலைக்காட்சி தளம் மஹாபலேஷ்வரில் இருப்பதிலேயே மிகப் பழமையானது என்பதும் குறிப்பிட்த்தக்கது. பெரிய இடமாக இருப்பதால் மதிய நேரத்தை ஓய்வாக கழிப்பதற்கு இது ஏற்ற இடமாகும். இதற்கு அருகிலேயே லவர்ஸ் பாயிண்ட் என்ற மற்றொரு மலைக்காட்சி தளமும் இருக்கின்றது.



Click it and Unblock the Notifications