மாஜூலியில் அமைந்திருக்கும் தக்கின்பாட் சத்ரா சமய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இதை வம்ஷிகோபால் அவர்களின் சீடர்களில் ஒருவர் 1584-ஆம் ஆண்டு நிறுவியுள்ளார்.
இங்கு ஸ்ரீ ஷங்கரதேவா பல்வேறு நடன வடிவங்களை பயிற்றுவித்ததால் இவ்விடம் 'நடன இல்லம்' என்றும் அழைக்கப்படுகிறது. அதோடு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
அஸ்ஸாமின் தேசிய திருவிழாவான ராசலீலா ஒவ்வொரு ஆண்டும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த நிறுவனம் தற்போது சத்ராதிகார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் ஸ்ரீ ஷங்கரதேவா அவர்களின் கையெழுத்துப்பிரதிகள் சில இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications