தெங்கபானியா எனும் இந்த முக்கியமான பிக்னிக் சிற்றுலாத்தலம் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் உள்ளது. இந்த அழகிய பிக்னிக் பிரதேசம் மாஜூலி தீவிற்கு அருகில் தகுவாகானா, மச்கோகா மற்றும் திசான்முக் ஆகிய இதர முக்கியமான இடங்களால் சூழப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றின் அற்புத அழகை அதன் கரையிலேயே அமைந்துள்ள இந்த தெங்கபானியா ஸ்தலத்திலிருந்து நன்றாக பார்த்து ரசிக்க முடியும். எனவே இப்பகுதியிலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
சிப்சாகர் எனும் நகரத்திற்கு வெகு அருகில் இந்த தெங்கபானியா ஸ்தலம் அமைந்திருக்கிறது. மாஜுலி மற்றும் ஜொர்ஹாத் ஆகிய இரண்டு இடங்களுடனும் இது போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
சிமாலுகுரி ஜங்ஷனுக்கு ரயில் மூலமாக சென்று அங்கிருந்து தெங்கபானியாவுக்கு சுலபமாக சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications