மண்டுவை உருவாக்கியிருக்கும் பல்வேறு அரச குடும்பத்தவர்களின் மாளிகைளில் ஒன்றுதான் ஹிண்டோலா மஹால். ஹோசாங் ஷாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த அரண்மனை, மன்னர் மக்களை சந்தித்து பேசும் தர்பார் மண்டபமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அற்புதமான வடிவமைப்புடன் இருக்கும் ஹிண்டோலா மஹால் என்ற வார்த்தைக்கும் 'சுழலும் மாளிகை' என்று பொருளாகும். இந்த மாளிகை முந்தைய கால அரசுகளின் பிரமிப்புகளை உள்ளடக்கியதாக இன்றும் நிமிர்ந்து நின்று கொண்டுள்ளது.
ஹிண்டோலா மஹாலை உருவாக்கிய கட்டிடக்கலை கலைஞரால், வாரங்கல் கோட்டையிலும் இதனைப் போன்ற மற்றுமொரு மஹாலும் கட்டப்பட்டுள்ளது.
மாளவ கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த கோட்டையின், வெளிப்புற சுவர்கள் அல்லது பாதுகாப்பு அரண்கள் 77 டிகிரிகள் சாய்வாக இருப்பதால் இந்த அரண்மனைக்கு சுழலும் அரண்மனை என்ற பெயர் வைக்கப்பட்டது.
வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் முக்கியமான அடையாளமாக ஹிண்டோலா மஹால் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனை இந்த மண்ணில் மறைந்திருக்கும் வராலாற்றை கண்டுகளிக்க உதவும் பயண அனுபவத்தை தரும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications