கோவாவின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான ரெய்ஸ் மகோஸ் கோட்டையின் அடிவாரத்தில் செயின்ட் ஜெரோம் தேவாலயம் அமைந்திருக்கிறது. இந்த ரெய்ஸ் மகோஸ் கோட்டையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி நடக்கும் 'பெஸ்டா டோஸ் ரெய்ஸ் மகோஸ்' என்ற திருவிழா பயணிகளிடையே மிகப்பிரபலம்.
கோவாவின் முக்கிய நகரங்களான பனாஜி, மார்கோ மற்றும் வாஸ்கோவிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் ஜெரோம் தேவாலயத்தை அடைந்து விடலாம். அதேபோல கேண்டலிம், பாகா, கலங்கூட் போன்ற வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள், வாடகை கார்களிலோ அல்லது ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டோ தேவாலயத்துக்கு வந்து சேரலாம்.



Click it and Unblock the Notifications