தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் மார்கோ நகரம் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கடற்கரைகளின் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் தேவாலயங்கள், கோயில்கள், 'ஷியா இமாம் இஸ்மாயிலி கோஜா ஜமட்கனா' மற்றும் 'அக்குவெம்' மசூதிகள் போன்ற புனித ஸ்தலங்களுக்காகவும் மார்கோ நகரம் பயணிகளிடையே பிரபலம்.
மார்கோ நகரம் பெநொவ்லிம், கோல்வா, வர்கா, பீட்டல் மற்றும் மஜோர்டா கடற்கரைப் பகுதிகளிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. இந்தக் கடற்கரைகள் அனைத்தையும் ஒரே நாளில் கால் நடையாகவே சென்று சுற்றிப் பார்த்து விடலாம்.
இந்தப் பகுதிகளில் உள்ள குடில்களில் நீங்கள் கோவான் உணவு வகைகளை ருசி பார்க்கலாம். அதோடு பீட்டல் கடற்கரைக்கு அருகில் உள்ள மீனவத் துறை என்ற பகுதிக்கு சென்று கட்டுமர சவாரி போன்ற நீர்விளையாட்டுகளில் ஈடுபடுவதும், அசல் கடல் உணவை உண்டு மகிழ்வதும் அலாதியான அனுபவம்.
மார்கோ நகருக்கு வெகு அருகிலேயே தாஜ், லீலா, ஹயாத், ஹாலிடே இன் போன்ற 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன. மேலும், இங்கு நீங்கள் ஷாப்பிங் செல்ல விரும்பினால் ஓசியா ஷாப்பிங் மால் என்ற புகழ்பெற்ற வணிக வளாகம் உள்ளது.
மார்கோ நகரம் தபோலிம் விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அதுமட்டுமல்லாமல் மார்கோவிலேயே ரயில் நிலையம் இருப்பதால், அங்கிருந்து மார்கோ நகரை அடைவதுதான் சுலபமான காரியம். அதோடு வாஸ்கோடகாமா மற்றும் பனாஜியிலிருந்து மார்கோ நகருக்கு காரில் வரும் அனுபவம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications