Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாத்தேரான் » வானிலை

மாத்தேரான் வானிலை

மாத்தேரான் மலைவாசஸ்தலம் இதமான விரும்பத்தக்க பருவநிலையை வருடம் முழுதும் பெற்றுள்ளது. ஈரப்பதம் அதிகம் இல்லாததால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் இங்கு விஜயம் செய்யலாம்.  இருப்பினும் குளிர்காலம் இங்கு  விஜயம் செய்ய உகந்த  காலமாக அறியப்பட்டுள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் வெப்பநிலை 32°Cக்கு மேல் உயர்வதில்லை. ஆகவே இனிமையான சூழல் காணப்படும் கோடைக்காலத்தில் இப்பகுதியை சுற்றிப்பார்ப்பது சௌகரியமாக உள்ளது.

மழைக்காலம்

ஜுனில் துவங்கி செப்டம்பரில் வரையிலான மழைக்காலத்தில் மாத்தேரான் பகுதி நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் மாத்தேரான் பகுதியின் சுற்றுப்புறம் பசுமையாக பூத்துக்குலுங்குவதால் இப்பகுதி பசுமைச் சொர்க்கமாக மாறி காதலர்களை அதிக அளவில் ஈர்க்கிறது.

குளிர்காலம்

மாத்தேரான் பகுதியில் குளிர்காலம் வெகு பிரமாதம் என்று சொல்லும்படியாக உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 20°C க்கு மேல் உயர்வதில்லை. குளிர்காலத்தில் பயணிகள் விஜயம் செய்து சுற்றிப் பார்ப்பதற்கேற்ற மிக உகந்த இனிமையான ஒரு சூழலுடன் மாத்தேரான் மலைவாசஸ்தலம் திகழ்கிறது