விந்தியாஞ்சல் நகரின் தென்மேற்கே அமைந்துள்ளது கால பைரவர் கோவில். கால பைரவருக்காக நிறுவப்பட்ட இக்கோவிலை ஷேத்ரபால் என்றும் அழைப்பர். கோவில்களில் காப்பாளன் என்று போற்றப்படும் காலபைரவர் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவக் குளம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதோடு இக்குளத்தில் இருக்கும் தண்ணீர் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், நோய்கள் தீர்க்கும் தன்மை கொண்டதாகவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications