கோயங்கா ஷிவாலயா சிவன் கோயில்களுள் மிகவும் பிரபல்யமான ஒரு பெயராகும். இந்துக்களின் யாத்ரீக ஸ்தலங்களைப் பொறுத்தவரை இக்கோயில் மிகப் பழமையான மற்றும் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இக்கோயில் தளும்பி வழியும் நீரில் துள்ளி விளையாடும் மீன்களுடன் காணப்படும் ஒரு மிகப் பெரிய குளத்தின் நடுவில் அமையப்பெற்றுள்ளது. இக்காட்சியை அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே பேருவகை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
இக்கோயிலைச் சுற்றி செழிப்பான பசுமை நிறைந்த அழகிய தோட்டங்களைக் காண முடிகிறது. சிவபெருமானுடன் தொடர்புடைய திருவிழா சமயங்களின் போது இக்கோயிலில் பெருந்திரளாக பக்தர்கள் கூடுகின்றனர்.



Click it and Unblock the Notifications