அடர்ந்த காடுகளுக்கு இடையே இருக்கும் இந்த சரணாலயம் பனியடர்ந்த இமயமலை உச்சிகளால் சூழப்பட்டுள்ளது. செளகாம்பா மற்றும் பாந்தார் பஞ்ச் ஆகிய மலை உச்சிகளை இங்கிருந்து காணலாம்.
அழிந்துவிட்ட பறவைகளான ரெட் பில்ட் ப்ளூ மேக்பீ, இமாலட க்வாய்ல்ஸ் ஆகியற்றின் சரணாலயமாக விளங்கிய இது, பறவை கண்காணிப்பாளர்களுக்கு ஏற்ற இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பருவகால பறவைகள் மட்டுமல்லாது பயணிகள் இங்கு மான்கள் மற்றும் சிறுத்தைகளையும் அதனதன் இயற்கை வாழ்விடத்திலேயே கண்டுகளிக்கலாம். இமாலய க்வாய்ல் பறவை கடைசியாக 1876ஆம் ஆண்டு இங்கு காணப்பட்டது.
இங்கிருக்கும் ஃபிர், பைன் மரங்களுடன் ஏராளமான மருத்தவ குணம் கொண்ட செடிகளும் அமைந்துள்ளன. இமாலய ஆடு, இமாலயக் கரடி மற்றும் வேங்கைகளையும் இங்கு காணலாம். முசூரி மற்றும் டெஹ்ராடூனில் இருந்து இங்கு பேருந்து வசதிகள் உண்டு.



Click it and Unblock the Notifications