ஆங்கிலேயர்களால் 1836ல் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இமயமலைத் தொடர்களிலேயே பழைய தேவாலயமாக கருதப்படுகிறது. 1906ல் இங்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசி (பின்பு இங்கிலாந்து ராணி மேரியாக முடிசூட்டப்பட்டவர்) இங்கு வரும்போது நட்டுவைத்த தியோதர் செடி, மரமாக வளர்ந்து இன்றும் காணப்படுகிறது.
கோதிக் கட்டிடக்கலை (Gothic) எனப்படும் இடைக்காலத்திய கட்டிடக்கலையின் படி கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தின் ஜன்னல்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சரித்திரம் வரையப்பட்டிருக்கிறது.
தேவாலயத்தின் பீடம் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட காட்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் உட்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
கட்டிடக்கலையை கண்டு ரசிக்கவும், தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் நூறு வருட பழமையான வில்லியம் ஹில் ஆர்கான் எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தையும் பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications