சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்கும் ஜாரிபாணி நீர்வீழ்ச்சி மூசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் செயிண்ட் ஜார்ஜ், ஓக் க்ரோவ் மற்றும் வைன் பெர்க் போன்ற பிரபலமான தங்குமிடப் பள்ளிகள் இருக்கின்றன.
மிக முக்கியமான சுற்றுலா தளமாக மட்டுமல்லாது பலவகை பூக்கள், செடிகள், புதர்கள் மற்றும் மூலிகைகள் சூழ அமைந்துள்ள இவ்விடத்தில் இருந்து பிரம்மாண்டமான ஷிவாலிக் மலைத் தொடர்களின் அழகைக் காணலாம்.
நீர்வீழ்ச்சியின் ஒருபுறம் அடுக்குத் தோட்டங்களும், மறுபுறம் அழகிய டூன் பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன. ஜாரிபாணி கிராமத்தில் இருந்து இந்நீர்வீழ்ச்சிக்கு பேருந்து வசதியும், ரிக்ஷா வசதியும் உண்டு. ஜாரிபாணி கிராமத்தில் இருந்து 2கிமீ மலையேற்றம் செய்தும் நீர்வீழ்ச்சியை அடையலாம்.



Click it and Unblock the Notifications