டிப்போட் ஹில் எனப்படும் லால் டிப்பா முசூரியில் இருப்பதிலேயே உயரமான சிகரமாகும். முசூரியில் அதிகமான ஜனத்தொகை கொண்ட லாண்டார் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது.
லால் டிப்பா பகுதியில் 'டிப்போ' எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் கருதப்படுகிறது. அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 1967ல் அமைக்கப்பட்ட தொலைநோக்கியின் (தொலைநோக்கி) வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம்.
பாம்பின் முனை என அழைக்கப்படும் நாக் டிப்பா குன்றும் முசூரியில் அமைந்துள்ளது .சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். சூரிய உதயத்தையும், மறைவையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம். அதுமட்டுமல்லாது ஆங்கிலேயர் காலத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்.