திபெத்திய புத்தர் கோவில் என வழங்கப்படும் ஷெடப் சோபெலிங் கோவில் முசூரியின் புகழ்பெற்ற திபெத்திய கோவில்களில் ஒன்றாகும். பனி படர்ந்த அழகிய மலைகளால் சூழப்பட்டுள்ள இக்கோவில் ஹேப்பி பள்ளத்தாக்கு சாலையில் அமைந்துள்ளது.
திபெத்தில் இருந்து தப்பி முசூரியில் தஞ்சமடைந்த தலாய்லாமாவுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த இடத்தை தர்மசாலையாக வழங்கியதாக சொல்லப்படுகிறது.
அழகிய மண் விளக்குகளாலும், பிரார்த்தனைக் கொடிகளாலும் இந்த கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் திபெத்தி இலக்கியம் சார்ந்த புத்தகங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.



Click it and Unblock the Notifications