முசூரியில் ஏராளமான மலைக்குன்றுகள் இருப்பதால், மலையேற்றத்திற்கு ஏற்ற இடமாக புகழ்பெற்று விளங்குகிறது. அக்லார் நதி, பார்க் எஸ்டேட், பத்ராஜ் காடுகள், லால் டிப்பா, நாக் டிப்பா ஆகிய இடங்களுக்கு பயணிகள் மலையேற்றத்தின் மூலம் பயணிக்கலாம்.
இமாலய சாகச பயிற்சிப்பள்ளி நதி தாண்டுதல், பாறை ஏற்றம், இயற்கைக் கூடாரம் அமைத்தல் ஆகியவற்றுடன் மலையேற்றத்திற்கான வசதிகளையும் செய்து தருகிறது.
மலையேற்றம் செய்பவர்கள் தங்கள் பயண வழிக்கேற்ப குடில்களையோ, வளமனைகளையோ வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ரங்கான் கோவ்ன் என்ற இடம் ஆபத்தானதாக கருதப்படுவதால் அங்கு மலையேற்றம் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications