Search
  • Follow NativePlanet
Share

முததி - காவிரிக் கரையில் ஓர் கனவு தேசம்

11

கர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

காவேரி நதியில், சலசலத்து ஓடும் சிற்றலைகளின் மீது பரிசல் பயணம் செல்லும் அனுபவம் அலாதியானது. அதுவும் முததியின் பரிசல் பயணம் அப்பகுதிகளில் மிகவும் பிரபலம்.

முததி கிராமம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இருப்பதாலும், அடர்ந்த காடுகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டிருப்பதாலும் எண்ணற்ற விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.

இங்கு சாம்பார் மற்றும் புள்ளி மான்கள்,காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், கரடிகள் உள்ளிட்டவற்றை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

அதேபோல் முததிக்கு அருகில் இருக்கும் பீமேஸ்வரி, சாகசப் பிரியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. ஆனால் இங்குள்ள காடுகளுக்குள் செல்ல வனத்துறையினரின் அனுமதி கண்டிப்பாக தேவை.

அதோடு கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சோலிகிரி குன்றில் நடை பயணம் செல்வதும்  நல்ல அனுபவமாக இருக்கும். இந்த குன்றின் உச்சியிலிருந்து பார்த்தால் முததியின் பேரழகை பயணிகள் எந்த தடையும் இல்லாமல் ரசிக்கலாம்.

முததி சிறப்பு

முததி வானிலை

சிறந்த காலநிலை முததி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது முததி

  • சாலை வழியாக
    பெங்களூரிலிருந்து, சாத்தனூருக்கு நிறைய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகையால் பயணிகள் முதலில் சாத்தனூர் வந்து, அதன் பின்னர் அங்கிருந்து தனியார் பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ முததியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    முததியிலிருந்து பெங்களூர் ரயில் நிலையம் 96 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையம் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின்னர் வாடகை கார்களிலேயோ, பேருந்துகளிலேயோ முததியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முததியிலிருந்து பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் 114 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி முததியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City