மைசூர் நகருக்கு வருகை தரும் கல்வி கலைகளில் தேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த கீழைத்தேச ஆய்வு மையமாகும். 1891ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் உண்மையிலேயே ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். அப்போதைய மைசூர் மஹாராஜாவின் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு மையத்தின் முக்கிய குறிக்கோள் பழைய சம்ஸ்கிருத, கன்னட கைப்பிரதி நூல்களை திரட்டி, செப்பனிட்டு, படியெடுத்து, திருத்தி அச்சிட்டு பரப்புவதாகும்.
இந்த மையத்தில் ஏறக்குறையை 33,000 பனை ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அரசாங்க கல்வித்துறையால் துவங்கப்பட்ட இந்த மையம் பின்னாளில் மைசூர் பல்கலைக்கழகத்தின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது.
இப்போதுள்ள ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனும் பெயரை 1943 ம் ஆண்டு இந்த மையம் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எல்லா வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் காலை10 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications