நாகூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த சீராளம்மன் கோயிலாகும். ஒரு சிறு நகரமாக இருந்தபோதிலும் நாகூர் நகரம் இது போன்ற பல கோயில்கள் மூலமே பிரசித்தமாக அறியப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு மீனவக்குடியிருப்புப்பகுதியில் இந்த சீராளம்மன் கோயில் அமைந்துள்ளது.ஒரு நூற்றாண்டு பழமையை உடைய இந்த கோயிலின் பராமரிப்பில் உள்ளூர் மீனவ மக்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர்.
இந்த கோயிலின் பின்னணியில் பல புராணிகக்கதைகளும் சொல்லப்படுகின்றன. வருடாவருடம் சீராளம்மன் திருவிழா இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த திருவிழா நடத்தப்படுகின்றது. இந்த கோயிலில் வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் இந்த தெய்வம் நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
கோயிலின் கருவறையில் தெய்வதரிசனம் செய்வதற்கு முன்பு பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சடங்குகளும் இங்கு உண்டு.



Click it and Unblock the Notifications