ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள ஜைதக் மலைகளின் மீது உள்ள ஜைதக் கோட்டை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். நஹனில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த கோட்டையை பார்வையாளர்கள் எளிதில் அடைய முடியும்.1810-ஆம் ஆண்டு கட்டப்பட்டு வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் இந்த கோட்டைதான் நஹன் நகரத்தின் பழமையான கோட்டையாகும்.
கோர்க் இனத் தலைவரான ரஞ்சோர் சிங் தாபா என்பவராலும் அவரைப் பின் பற்றியவர்களாலும் கட்டப்பட்ட இந்த இடம், நஹனில் இருந்த கோட்டையின் அழிவுகளில் இருந்து எடுத்த பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டது. இந்த கோட்டையிலிருந்து காணக் கிடைக்கும் ஜைதக் மலையின் சுற்றுப்புற காட்சிகள் பார்வையாளர்களின் மனதை மயக்குவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications