Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாலந்தா » வானிலை

நாலந்தா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே நாலந்தா செல்ல ஏதுவான காலம் ஆகும். இம்மாதங்களின் போது இங்கு நிலவக்கூடிய வானிலை, நகரை சுற்றிப் பார்ப்பதற்கு உகந்ததாக இருக்கும்.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரையில் கோடைகாலத்தின் ஆட்சி நடக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலைகள் மிகக் கடுமையாக இருக்கும். கோடைகால வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரியாகவும், குறைந்த பட்சமாக 20 டிகிரியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலம்

மழைக்காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கிறது. மழைக்காலத்தின் போது பீஹார் மொத்தமும் கடும் மழைப்பொழிவைப் பெறுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களே குளிர்கால மாதங்கள் ஆகும். இக்காலத்தின் போது, வெப்பநிலை சுமார் 10 டிகிரி வரை குறைந்து காணப்படுகிறது. எனினும் நாட்கள் குளுமையாகவும், ரம்மியமாகவும், சுமார் 25 டிகிரி வரையிலான அதிக பட்ச வெப்பநிலையுடனும் இருப்பதினால், இதுவே இங்கு செல்வதற்கு உகந்த காலமாகும்.