யோக நந்தீஸ்வரர் ஆலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் அப்பகுதியில் காணப்படும் புனித ஸ்தலங்களில் மிகவும் பழமையானது.
இந்த கோயிலின் சுவர்களில் காணப்படும் சித்திரங்களும், சிற்பங்களும் காண்போரை வெகுவாக கவரும். அதோடு இங்குள்ள கல்யாண மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
யோக நந்தீஸ்வரர் ஆலயத்தின் வாயிலில் இரண்டு துவார பாலகர்களின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும், சத்ரபதி சிவாஜியின் புதல்வர் சம்பாஜி மகாராஜாவின் கல்வெட்டுக்கள் ஆலயத்தை சுற்றி காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுக்களை பக்தர்கள் படித்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது.



Click it and Unblock the Notifications