மஹேந்திரகார்கில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள பகோட் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இங்கிருக்கும் சிவன் கோவிலில் நவராத்திரியின் போது பிரம்மாண்டமான விழா எடுக்கப்படுகிறது.
தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். வேண்டிதல் நிறைவேறியபின் ஹரித்வார் செல்லும் பக்தர்கள், கங்கையில் இருந்து கவார்ஸ் என அழைக்கப்படும் சொம்புகளில் புனித நீரை கொண்டு வருகிறார்கள்.
பகோட்டில் இருந்து ஹரித்வாருக்கு நடைபயணமாகவே செல்லும் பக்தர்கள் வழியில் தங்கள் கவார்ஸ்களை தரையில் வைப்பதில்லை. பகோட் சென்றடைந்தபின் அப்புனித நீரை சிவன் சிலையின் மேல் தெளித்து வழிபடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications