Search
  • Follow NativePlanet
Share
» »கோடை விடுமுறைக்கு குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் வாங்க?

கோடை விடுமுறைக்கு குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் வாங்க?

கோடை விடுமுறை பயணத்துக்கு தயாராகிவிட்டீர்களா? அப்படியானால் பாலியின் மணல் கடற்கரைகள், பாங்காக்கின் பரபரப்பான தெருக்கள் உள்ளிட்ட இன்னும் சில இடங்களை, உங்கள் ஊர் சுற்றும் பட்டியிலில் சேர்க்க மறக்காதீங்க...! அட போங்க ஆசை தான் சுற்றுலா செல்லும் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடங்களை சேர்க்க, ஆனா பட்ஜெட்டில் செல்ல முடியும்? முடியும் நீங்கள் பறக்கலாம் தோஹாவுக்கு 17 ஆயிரம் ரூபாய் இருந்தால்....

இந்தியாவில் இருந்து குறைந்த கட்டணத்தில், ஐந்து முக்கிய சர்வதேச நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள், இந்த கோடைக்கு உங்களை குதுாகலிக்க போகிறது. இந்தியாவில் இருந்து புதிய சர்வதேச நேரடி விமானங்கள் பட்டியலில் என்னென்ன என்பதை பார்க்கலாமே...!

flightsfare2

ஹைதராபாத் முதல் பாங்காக்

பிப்ரவரியின் பிற்பகுதியில், 'இண்டிகோ' ஹைதராபாத் மற்றும் பாங்காக் இடையே தினசரி நேரடி விமானங்களை தொடங்கியுள்ளது. இரு நகரங்களுக்கு இடையே நேரடி இணைப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய கேரியர் இதுவாகும்.

பாங்காக் செல்லும் விமானம் அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு தரையிறங்குகிறது. அதே நேரத்தில் ஹைதராபாத் திரும்பும் விமானம் காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.05 மணிக்கு தரையிறங்குகிறது. ஒரு வழி பயண டிக்கெட் கட்டணம் ரூ.14,188 முதல் தொடங்குகிறது.

சென்னை முதல் குவைத்

மார்ச் 3 முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்னை மற்றும் குவைத் இடையே வாரத்திற்கு ஐந்து முறை (திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு) நேரடி விமானங்களை இயக்குகிறது.

குவைத் செல்லும் விமானம் இரவு 18.50 மணிக்கு புறப்பட்டு 22.05 மணிக்கு தரையிறங்குகிறது, அதே நேரத்தில், சென்னை செல்லும் விமானம் 23.05 மணிக்கு புறப்பட்டு, காலை 06.35 மணிக்கு தரையிறங்குகிறது.

இண்டிகோ மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகிய இரண்டு மற்ற விமான நிறுவனங்கள், இந்த வழித்தடத்தில் நேரடி விமானங்களை இயக்குகின்றன. ஒரு வழி பயண டிக்கெட் கட்டணம் ரூ.12,010 முதல் தொடங்குகிறது.

flightsfare check

ஜெய்ப்பூர் முதல் அபுதாபி

ஜூன் 16 முதல், எதிஹாட் ஏர்வேஸ் ஜெய்ப்பூர் மற்றும் அபுதாபி இடையே வாரத்திற்கு நான்கு முறை (திங்கள், புதன், வெள்ளி ஞாயிறு) நேரடி விமானங்களைத் தொடங்குகிறது. அபுதாபிக்கு செல்லும் விமானம் காலை 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு தரையிறங்கும்.

ஜெய்பூர் செல்லும் விமானம் அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு தரையிறங்கும். தற்போது இந்த வழித்தடத்தில் நேரடி விமானங்கள் இல்லை.

இண்டிகோ ஜெய்ப்பூரில் இருந்து அபுதாபிக்கு அகமதாபாத் அல்லது மும்பையில் நிறுத்தத்துடன் விமானங்களை வழங்குகிறது. ஒரு வழி டிக்கெட் கட்டணம் ரூ.15,865 முதல் தொடங்குகிறது

மும்பை முதல் தோஹா

ஆகாசா ஏர் மார்ச் 28 முதல் மும்பை மற்றும் தோஹா இடையே நேரடி விமானங்களைத் தொடங்கும். இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற ஏர்லைன்களில் இருந்து, தற்போது நேரடி விமானங்கள் இருக்கும் பாதை இதுவாக இருந்தாலும், இது ஆகாசா ஏர் இன் சர்வதேச நடவடிக்கைகளில் முதல் தடவை ஆகும்.

வாரத்திற்கு நான்கு முறை (புதன், வியாழன், சனி, ஞாயிறு) விமானம் இயக்கப்படும். தோஹா செல்லும் விமானம் இரவு 17.45 மணிக்கு புறப்பட்டு இரவு 19.40 மணிக்கு தரையிறங்கும். மும்பை செல்லும் விமானம் 20.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.45 மணிக்கு தரையிறங்கும். ஒரு வழி டிக்கெட் ரூ.17,210 முதல் தொடங்குகிறது.

internationaflights fare reduction

பெங்களூரு முதல் பாலி

மார்ச் 29 முதல், இண்டிகோ பெங்களூரு மற்றும் பாலி இடையே தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும். பாலியில் உள்ள டென்பசார் செல்லும் விமானம் காலை 00.05 மணிக்கு புறப்பட்டு 10.20 மணிக்கு தரையிறங்கும்.

பெங்களூரு செல்லும் விமானம் 11.20 மணிக்கு புறப்பட்டு மாலை 15.15 மணிக்கு தரையிறங்கும். ஜகார்த்தாவிற்கு அடுத்தபடியாக பாலி இந்தோனேசியாவில் இண்டிகோவின் இரண்டாவது இடமாகும். இந்த வழித்தடத்தில் தற்போது வேறு நேரடி விமானங்கள் இல்லை. ஒரு வழி டிக்கெட் ரூ.18,496 முதல் தொடங்குகிறது.

ஒரு இடத்துக்கு செல்ல நேரடியாக செல்வதற்கும் சுற்றி செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா...! அதே போல தான் குறைந்த கட்டணம், பயண நேரம் விரையமின்மை போன்ற காரணங்களுக்காக, நேரடி விமான சேவையை பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும். எது எப்படியோ, இந்த கோடை விடுமுறைக்கு குறைந்த கட்டணத்தில் பாங்காங் தெருக்களை சுற்றி பார்க்க போறீங்க தானே...!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+