Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் தங்க வரலாறு – ஒரு காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.64 தான்!

இந்தியாவின் தங்க வரலாறு – ஒரு காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.64 தான்!

தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகம், பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பெரும் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனுபவித்து வருகிறது. தங்கம் செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. பாரம்பரிய நகைகள் மற்றும் மத விழாக்களில் தங்கம் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆம்! ஒரு காலத்தில் 10 கிராம் தங்கம் ரூ.64 க்கு இந்தியாவில் விற்ற நிலையில், இப்போது அதே 10 கிராம் தங்கம் ரூ.73,000 க்கு விற்கிறது. இந்தியாவில் தங்கத்தின் வரலாறு என்ன என்று பார்ப்போமா?

தங்கத்தினை அதிகம் விரும்பி வாங்கும் இந்திய மக்கள்

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பெரியவர்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைவருமே தங்க ஆபரணங்களை விரும்புவார்கள். ராஜா காலம் தொடங்கி இந்த காலம் வரை தங்கத்திற்கான மதிப்பும், விலையும் சற்று குறையவே இல்லை. நவீன காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட, வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். உலகளவில் தங்கத்தின் முன்னணி நுகர்வோர்களில் ஒன்றாக இந்தியா தனித்து நிற்கிறது, அதன் மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக கருதுகின்றனர். இதன் விளைவாக, உலகின் இரண்டாவது பெரிய தங்கம் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.

உயர்ந்து கொண்டே இருக்கும் தங்கத்தின் விலை

கிடுகிடுவென உயருகின்ற தங்கம் விலையைப் பார்த்தால் சாமானிய மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாது போல. இன்றைய தேதிக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.6800க்கு விற்பனை ஆகிறது, செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் ரூ.60,000 வரை கொடுக்க வேண்டும். இதையே நம்மால் வாங்க முடியவில்லை, இன்று கூடிய விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.80,000 ஐ எட்டப் போகிறது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இனி நாம் தங்கத்தை நகைக் கடைகளில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.

gold1

தங்கத்திற்கு இந்தியாவில் என்றுமே ஒரு தனி மதிப்பு தான்

இந்தியாவில் தங்கம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது. இது உலகின் ஆரம்பகால நகர்ப்புற நாகரிகங்களில் ஒன்றாகும். தொல்லியல் சான்றுகள் தங்கம் ஆபரணங்களுக்கும் வணிகத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. தங்கம் அதன் தூய்மைக்காக மிகவும் மதிக்கப்பட்டது, மேலும் உலோகம் பெரும்பாலும் நாணயமாக பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் தங்கத்தின் விலைகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சூழலைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது!

ஆண்டு வாரியாக தங்கத்தின் விலை (10 கிராம் - 24 காரட்)

1964 -- ரூ.63.25

1965 - ரூ.71.75

1966 - ரூ.83.75

1967 - ரூ.102.50

1968 - ரூ.162.00

1969 - ரூ.176.00

1970 - ரூ.184.00

1971 - ரூ.193.00

1972 - ரூ.202.00

1973 - ரூ.278.50

1974 - ரூ.506.00

1975 - ரூ.540.00

1976 - ரூ.432.00

1977 - ரூ.486.00

1978 - ரூ.685.00

1979 - ரூ.937.00

1980 - ரூ.1,330.00

1981 - ரூ.1670.00

1982 - ரூ.1,645.00

1983 - ரூ.1,800.00

1984 - ரூ.1,970.00

1985 - ரூ.2,130.00

1986 - ரூ.2,140.00

1987 - ரூ.2,570.00

1988 - ரூ.3,130.00

1989 - ரூ.3,140.00

1990 - ரூ.3,200.00

1991 - ரூ.3,466.00

1992 - ரூ.4,334.00

1993 - ரூ.4,140.00

1994 - ரூ.4,598.00

1995 - ரூ.4,680.00

1996 - ரூ.5,160.00

1997 - ரூ.4,725.00

1998 - ரூ.4,045.00

1999 - ரூ.4,234.00

gold price

2000 - ரூ.4,400.00

2001 - ரூ.4,300.00

2002 - ரூ.4,990.00

2003 - ரூ.5,600.00

2004 - ரூ.5,850.00

2005 - ரூ.7,000.00

2006 - ரூ.8490.00

2007 - ரூ.10,800.00

2008 - ரூ.12,500.00

2009 - ரூ.14,500.00

2010 - ரூ.18,500.00

2011 - ரூ.26,400.00

2012 - ரூ.31,050.00

2013 - ரூ.29,600.00

2014 - ரூ.28,006.50

2015 - ரூ.26,343.50

2016 - ரூ.28,623.50

2017 - ரூ.29,667.50

2018 - ரூ.31,438.00

2019 - ரூ.35,220.00

2020 - ரூ.48,651.00

2021 - ரூ.48,720.00

2022 - ரூ.52,670.00

2023 - ரூ.63,203.00

2024 - ரூ.73,390.00

எப்படி இருந்த தங்கத்தின் விலை இப்போது எப்படி இருக்கிறது பாருங்களேன்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+