• Follow NativePlanet
Share
» »ரூ.100 போதும்...கோடையில் குட்டீஸ்களை குதுாகலப்படுத்த...!

ரூ.100 போதும்...கோடையில் குட்டீஸ்களை குதுாகலப்படுத்த...!

'போர் அடிக்குது' என்ற வார்த்தையை மிகவும் சாதாரணமாக உபயோகம் செய்கின்றனர் இன்றைய குட்டீஸ்கள். உண்மையில், போர் அடித்தல் என்பது ஒரு சந்தோஷம் இல்லாத மன நிலையை குறிக்கிறது. இவற்றை அப்படியே விட்டு விடக்கூடாது என, குழந்தைகள் நிபுணர்கள் கூறுகின்றனர். அடடே குழந்தைகள் நலன் சார்ந்த மருத்துவ குறிப்பு சொல்ல போறீங்களா? என, நீங்க கேட்பது எனக்கு புரிகிறது. ஐயோ சாமி...! நீங்கள் நினைக்கிற மாதிரி நான் அட்வைஸ் பண்ண வரல...! 'போர் அடிக்குது' என்று உங்க குட்டீஸ் சொல்லி சொல்லி உங்களை டென்சன் பண்ணுகிறார்களா?

அப்ப அவங்களே ஆனந்தம் படும் ஒரு இடத்துக்கு அழைத்து செல்லுங்களேன்...! அட போங்க சார்... அவங்களை ஆனந்தம் பட வைக்கனும்னா, அதற்கு எல்லாம் செலவு ஆகும் என, நீங்க சொல்லுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு உண்மை, உலகம் தெரியவில்லை என்றே சொல்லுவேன்.

indiasfirst360-degreedometheatre-1712998117 jpg

உங்கள் கையில், ஒரு 100 ரூபாய் இருந்தால் போதும் அரை மணி நேரம் உங்கள் குட்டீஸ்கள் போர் அடிக்குதுனு சொல்ல மாட்டாங்க. அவங்களை சுற்றி, 360 டிகிரியில் பிடித்த, பிரபலமான அனிமேஷன் படங்களை 'டோம் தியேட்டர்'ல பார்க்க கூட்டிட்டு போங்க...!

இந்தியாவில் திரை அரங்கம், பார்வையாளர் பகுதி தனியாகவும், திரை தனியாகவும் தான் அமைந்திருக்கும். ஆனால், வெளிநாடுகளில், பார்வையாளர்களும் படக்காட்சியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும், 'டோம் தியேட்டர்' மிகவும் பிரபலம்.

ஸ்பெயின், தென் கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வரிசையில், இந்தியாவில் முதல் முறையாக, 'டோம் தியேட்டர்' தொடங்கப்பட்டுள்ளது. பார்வையாளரைச் சுற்றி, 360 டிகிரியிலும் காட்சி ஓடும் வகையில், இந்த 360 டிகிரி தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கே, எப்படி போவது

இந்தியாவில், முதல் முறையாக, 360 டிகிரியில் படம் பார்க்கும் வசதியுடன், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, மேலகோட்டையூரில், காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தால், 'சன் டான்ஸ் டோம் தியேட்டர்' அமைக்கப்பட்டுள்ளது.

பிரபலமான கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனம் 'சன் சிட்டி' என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இங்கு, பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தின் ஒரு பகுதியில், 'சன் டான்ஸ்' என்ற பெயரில், 360 டிகிரியில் படம் பார்க்கும் வகையில், 'டோம்' தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. 'இம்மெர்சிவ் சூப்பர் ரியாலிட்டி' என்ற அடிப்படையில், '5டி' காட்சி அமைப்புடன் இங்கு தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபலமான அனிமேஷன் படங்களான, அலாதீன், பீட்டர் பேன் போன்ற படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இங்கு, 360 டிகிரியில் திரையில் காட்சிகளை கண்டு பரவசம் அடையலாம். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த டோம் தியேட்டர் அனுபவம்.

இதில், 30 நிமிடங்களுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 'சன் டான்ஸ் டோம் தியேட்டர்' அனுபவத்தை, சென்னை மக்களுக்கு அளிக்க முடிவு செய்து, மேலக்கோட்டையூரில் அமைத்துள்ள இந்த தியேட்டரில், பிப்., 23 முதல் தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, டோம் தியேட்டரில் பொது மக்களுக்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

என்ன கூட்டீஸ் ரெடியா...! போர் அடிக்குதுனு சொல்லாம அங்க உங்க பெற்றோரை அழைச்சிட்டு போய், ஒரு ரவுண்ட் அடிங்க.. அப்ப தெரியும் உண்மையான ஜாலி என்னானு.

ஹலோ பேரண்ட்ஸ் டிக்கெட் எடுக்க கிளம்பிட்டீங்களா... அப்ப இது உங்களுக்கு தான். நேரா போய் எல்லாம் டிக்கெட் எடுக்க முடியாதுங்க.. புக்மை ஷோ போன்ற ஆன்லைன் ஆப்ஸ் வாயிலாக தான் டிக்கெட் புக் செய்ய முடியும். கூடுதல் விபரங்களுக்கு, 89255 58533 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

More News

    Read more about: chennai tamilnadu india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+