Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியர்களுக்கு தாய்லாந்து சொன்ன நல்ல செய்தி தெரியும்?

இந்தியர்களுக்கு தாய்லாந்து சொன்ன நல்ல செய்தி தெரியும்?

கோடை விடுமுறைக்கு என்ட் கார்டு போடுற நேரம் நெருங்கிட்டு வரும் வேளையிலும், உலகளவில், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க, பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வரிசையில், இந்தியர்களுக்கு தாய்லாந்து நாடு ஒரு நற்செய்தியை சொல்லி இருக்கு என்றால் நம்ப முடிகிறதா?

தாய்லாந்தின் அழகான கடற்கரைகள், தீவுகள் மற்றும் சுவையான உணவுகளை, விசா இல்லாமல் அனுபவிக்கும் வாய்ப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.

அதாவது, கடந்தாண்டு நவம்பரில் இந்தியர்கள் விசா இல்லாமல், தங்கள் நாட்டுக்குள் நுழையலாம் என, தாய்லாந்து சுற்றுலா ஆணையம் அறிவித்தது. தற்போது அந்த வசதியை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

visa-freeaccesstothetropicalcountry

அதாவது, இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை ஆறு கூடுதல் மாதங்களுக்கு, 10 நவம்பர் 2024 வரை அனுமதித்துள்ளது. முன்னதாக, இந்தியர்கள் தாய்லாந்திற்குச் சென்ற பின் விசா எடுக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இது அவர்கள் 15 நாட்கள் வரை தங்க அனுமதித்தது. தாய்லாந்தின் விசா இல்லாத நுழைவு வசதியுடன், இந்தியர்கள் தாய்லாந்தில் 30 நாட்கள் வரை தங்கலாம்.

பன்மடங்கு அதிகரிப்பு

இந்த அறிவிப்பால், தாய்லாந்தின் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரித்தது. நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 39% அதிகமாகும்.

சீனா, தென் கொரியா, மலேசியா மற்றும் பலவற்றுடன் தாய்லாந்தின் சுற்றுலாப் பயணத்தில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. விசா இல்லாத நுழைவு வசதி இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் செல்லுபடியாகும்.

தாய்லாந்திற்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், குறைந்த ஹோட்டல் மற்றும் விமானக் கட்டணங்களில், கோடை வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் தையரித்துடன் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் சுற்றலாம். இல்லை எனில், நாட்டின் வழக்கமான பருவ காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஊர் சுற்றி பார்க்கலாம்.

தாய்லாந்தில், கோ கூடின் டர்க்கைஸ் நீரைக் கண்டுபிடிப்பது மற்றும் பாங்காக்கில் சிறந்த தெரு உணவுகளைக் கண்டறிவது, ரயில்வே பின்னணியிலான ஹோட்டலில் தங்குவது மற்றும் மிச்செலின் நட்சத்திரமிட்ட உணவகங்களில் சாப்பிடுவது வரை, தாய்லாந்தில் நிறையவற்றை அனுபவிக்க தயாராகுங்கள் இப்போதே...! டேய் மச்சான் தாய்லாந்து போலாமானு நமட்டு சிரிப்புடன் நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

More News

    Read more about: chennai tamilnadu india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+