Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்காக உலகத்தர வசதிகளுடன் கூடிய லவுஞ்ச் திறப்பு!

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்காக உலகத்தர வசதிகளுடன் கூடிய லவுஞ்ச் திறப்பு!

சென்னை சர்வதேச விமானத்திற்கு அடிக்கடி செல்பவரா நீங்கள்? அப்படியானால் புதிதாக, மிகவும் பிரமாண்டமாக, சர்வதேச பயணிகளுக்காக திறக்கப்பட்ட புதிய லவுஞ்ச் வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா? உலகத்தர வசதிகளுடன் கூடிய திறக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 450 பேர் வரை உபயோகிக்கலாம்! அதனைப் பற்றிய சிறப்பம்சங்கள் இதோ!

சர்வதேச விமானப் பயணிகளுக்கான புதிய டிராவல் கிளப் லவுஞ்ச்

சென்னை விமான நிலையம் அதன் பயணிகளுக்காக மிகவும் வசதியான புதிய ஓய்வறை சமீபத்தில் திறந்து வைத்தது. டிராவல் கிளப் லவுஞ்ச் என்று அழைக்கப்படும் இந்த ஓய்வறையை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக் திறந்து வைத்தார். புதிய ஒருங்கிணைந்த முனையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, சர்வதேச விமானப் பயணிகளுக்கான புதிய டிராவல் கிளப் லவுஞ்சை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1

ஒரு நேரத்தில், ஓய்வறையில் 450 பயணிகள்

ஒரு நேரத்தில், ஓய்வறையில் 450 பயணிகள் வரை தங்கிக் கொள்ளலாம். வணிக வகுப்பில் பயணம் செய்பவர்கள் ஓய்வறையின் சேவைகளை இலவசமாகப் பெறலாம், அதேசமயம் மற்ற வகையைச் சேர்ந்த பயணிகள் ஓய்வறைச் சேவைகள் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஓய்வறையில் உலகத்தரத்தில் உணவு, ஏசி ஓய்வறை, சார்ஜிங், சோபா வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல நிரம்பியுள்ளன.

உள்ளூர் சமையல் முதல் உலக சமையல் வரை

லவுஞ்ச் பல்வேறு வகையான உணவு வகைகளிலிருந்து ஏராளமான சமையல் விருப்பங்களையும் வழங்குகிறது. இது இந்திய மற்றும் சீன மற்றும் மேற்கத்திய உணவு வகைகளை வழங்குகிறது, வணிக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கும் தனித்தனி பிரிவாக இங்கு ஓய்வறைகள் உண்டு.

2

2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள லவுஞ்ச்

புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தில் அமைந்துள்ள புதிய டிராவல் கிளப் லவுஞ்சில் ஓய்வறை, ஒரு பொழுதுபோக்கு பகுதியுடன் கூடுதலாக, ஒரு நூலக மண்டலம் மற்றும் ஒரு ஆரோக்கிய மையத்தையும் கொண்டுள்ளது. 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த லவுஞ்ச் அழகான கட்டிடக்கலையில் நம்மை மிரள வைக்கிறது.

வணிக வகுப்பு பயணிகளுக்கு இலவசம்

புதிய ஓய்வறை அதிநவீன வசதிகளுடன் நிரப்பப்பட்டு பயணிகள் வசதியாக தங்குவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வணிக வகுப்பில் (Business Class) பயணிப்பவர்களுக்கு இது இலவசம் ஆனால் மற்ற வகைகளில் பயணிப்பவர்களும் பணம் செலுத்தி இங்கு தங்கலாம். இனி சென்னை சர்வதேச விமான நிலையத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, இந்த ஓய்வறையில் தங்கி பாருங்கள்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+