Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் – இந்த இடத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றனவா?

இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் – இந்த இடத்தில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றனவா?

என்ன தான் டைனோசர்கள் இறந்து பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் டைனோசர்களை யாரும் மறந்துவிடவில்லை. நம் தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே வந்த அனிமேஷன்கள், கார்ட்டூன் கதைகள், முதல் சமீபத்தில் வந்த ஜுராசிக் பார்க் போன்ற படங்கள் வரை டைனோசர்கள் நம் மனதில் நிற்கின்றன. அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு டைனோசர் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும், ஏன் நாமும் குழந்தைகளாக இருந்த போது அவற்றை விரும்பி தான் இருந்திருப்போம். நம் நாட்டிலேயே டைனோசர்கள் வாழ்ந்தன என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான். மத்தியப்பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டத்தின் நர்மதா பள்ளத்தாக்கு அருகே டைட்டானோசர்களின் 256 புதைபடிவ முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

நர்மதா பள்ளத்தாக்கில் 265 டைனோசர் முட்டைகள்

நர்மதா பள்ளத்தாக்கில் 265 டைனோசர் முட்டைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கின் தார் பகுதியில், தாவரவகை டைட்டானோசர்களின் (டைனோசர் வகைகளிலே மிகவும் பெரியது) 265 புதைபடிவ முட்டைகளும் 92 கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் டைனோசர் புதைபடிவங்களுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகின்றன. இது டைனோசர் இனங்களின் பன்முகத்தன்மை, கூடு கட்டும் நடத்தை போன்ற முக்கிய விவரங்களை வழங்குகிறது. இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளன்னர்.

டைட்டானோசர்களின் குஞ்சு பொரிக்கும் இடம்

டைட்டானோசர்களின் குஞ்சு பொரிக்கும் இடம்

டைனோசர் முட்டைகளும் கூடுகளும் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் நர்மதா பள்ளத்தாக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் வளமான குஞ்சு பொரிக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை எழுப்பியுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த டைட்டானோசர்களின் சுற்றுப்புறங்கள் மற்றும் வாழ்க்கை பற்றிய மூல தரவுகளை வழங்குகிறது.

முட்டைக் கூடுகளுடன் காணப்பட்ட முட்டைகள்

முட்டைக் கூடுகளுடன் காணப்பட்ட முட்டைகள்

அகடா, தோலியா ராய்புரியா, ஜபுவா, ஜம்னியாபுரா மற்றும் பட்லியா ஆகிய ஐந்து இடங்களில் இருந்து மொத்தம் 92 முட்டைகளின் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நர்மதா பள்ளத்தாக்கில் காணப்படும் கூடுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இருந்ததாகவும், 15 செ.மீ முதல் 17 செ.மீ விட்டம் கொண்ட முட்டைகளைக் கொண்டதாகவும் அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. ஒவ்வொரு கூட்டிலும் ஒன்று முதல் 20 முட்டைகள் இருந்ததாகவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இதுவல்ல முதல் முறை

இதுவல்ல முதல் முறை

பிற பழங்கால ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன்பு மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மற்றும் குஜராத்தின் பாலசினோர் ஆகிய இடங்களில் டைனோசர் கூடுகளையும் முட்டைகளையும் கண்டுபிடித்ததால் இதுபோன்ற கண்டுபிடிப்பு இது முதல் முறை அல்ல. 2017 மற்றும் 2020 க்கு இடையில், டெல்லியின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மோகன்பூர்-கொல்கத்தா மற்றும் போபால் ஆகியவற்றின் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு தார் மாவட்டத்தின் பாக் மற்றும் குக்ஷி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் களப்பணிகளை மேற்கொண்டது.

CT ஸ்கேன் செய்ய அறிவுரை

CT ஸ்கேன் செய்ய அறிவுரை

டைட்டானோசர்கள் நர்மதா பள்ளத்தாக்கின் இந்தப் பகுதிக்கு குறிப்பாக முட்டையிட வந்திருக்கலாம் அல்லது முட்டைகளும் அங்கேயே குஞ்சு பொரித்திருக்கலாம். அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட முட்டைகள் குஞ்சு பொரித்ததற்கும், குஞ்சு பொரிக்காததற்கும் ஆதாரங்களை சித்தரிப்பதாக முன்னணி ஆய்வாளரான திமான் கூறினார். மேலும், எலும்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், மேலதிக ஆராய்ச்சிக்காக மைக்ரோ CT ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பறவைகளை போல செயல்படும் டைட்டானோசர்கள்

பறவைகளை போல செயல்படும் டைட்டானோசர்கள்

டைட்டானோசர்கள் பறவைகளைப் போன்ற ஒரு இனப்பெருக்க அமைப்பைக் கொண்டிருப்பதாக முந்தைய ஆய்வுகள் கூறுகிறது. கூடுதலாக, நவீன பறவைகளைப் போல் அவை முட்டையிடுகின்றன. பாறைகள் மற்றும் சில முட்டைகள் மீது மேற்கொள்ளப்பட்ட கூடுதல் ஆராய்ச்சியின் அடிப்படையில் இப்பகுதி ஒரு காலத்தில் ஒரு நதி கால்வாயின் தாயகமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதுவரை பூமியில் நடமாடிய மிகப்பெரிய டைனோசர்களில் பெரிதான டைட்டானோசர்கள் இந்தியாவில் வாழ்ந்து இருப்பது, விசித்திரமாக இருக்கிறது அல்லவா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள்?

More News

    Read more about: narmada valley madhya pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+