Search
  • Follow NativePlanet
Share
» »தாம்பரத்திலிருந்து மங்களூரு ஜங்க்ஷனுக்கு சிறப்பு ரயில் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

தாம்பரத்திலிருந்து மங்களூரு ஜங்க்ஷனுக்கு சிறப்பு ரயில் – டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

கோடை விடுமுறை, பல இடங்களில் சுற்றுலா சீசன் என்பதால் தென்னிந்தியாவில் இயக்கப்படும் பல ரயில்கள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. டிக்கெட் புக் செய்தவர்களும் கூட சில இன்னல்களுடன் பயணிப்பதாக ரயில்வேக்கு தொடர்ந்து குற்றசாட்டுக்கள் எழுந்து வந்தன. அந்த வகையில், கூடுதல் நெரிசலை சமாளிக்க, சென்னை கடற்கரை மற்றும் பெரம்பூர் வழியாக தாம்பரம் - மங்களூரு கோட்டத்தில் ஜூன் மாதம் இருவார சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே (SR) அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களை இயக்கும் தென்னக ரயில்வே

குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம், நிறைய லக்கேஜ் எடுத்துக் கொள்ள உதவியாக இருப்பது, நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் அவ்வப்போது எழுந்து நடக்க வசதியாக இருப்பது என ரயில் பயணம் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது என்றே சொல்லலாம். சென்னை பீச்-செங்கல்பட்டு ரயில் தொடங்கி வெளியூர் செல்லும் ரயில்கள் வரையில் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அந்த வகையில் இப்போது சென்னை-மங்களூரு ஜங்க்ஷன் இடையே சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது!

தாம்பரம்-மங்களூரு இடையே சிறப்பு ரயில்

தாம்பரம் - மங்களூரு ஏசி இருவார சிறப்பு ரயில் ஜூன் 7, 9, 14, 16, 21, 23, 28, மற்றும் 30 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும். மொத்தமாக இந்த ரயில் எட்டு முறை தாம்பரத்தில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Special trains to run between from chennai to mangaluru

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன

மறு மார்க்கமாக, மங்களூரு - தாம்பரம் ஏசி இருவார சிறப்பு ரயில் ஜூன் 8, 10, 15, 17, 22, 24, 29, மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் திங்கள்) மங்களூருவில் இருந்து அதிகாலை 12 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலில் 14 3ஏசி எகானமி கோச்சுகள் மற்றும் இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (ஊனமுற்றோர்-நட்பு) இருக்கும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு

சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் நிரந்தரமாக ஒரு 3ஏசி எகானமி கோச்சுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மேலும் கூறியுள்ளது. இந்த ரயிலுக்கான ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டுகள் ரூ.480 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ரயிலில் நீங்கள் பயணம் செய்ய இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+