Search
  • Follow NativePlanet
Share
» »கடலில் காணப்படும் நீல நிற ஆழமான துளையை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு

கடலில் காணப்படும் நீல நிற ஆழமான துளையை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? புதிதாக ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு

கடலுக்குள் குகை போன்ற அமைப்பு, மேலிருந்து பார்ப்பதற்கு கடல் தண்ணீர் உள்ளே உறிஞ்சப்படுவது போல தெரிகின்ற ஒரு ஆச்சர்யம், இது தான் கடலில் உள்ள நீல துளை! மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கடற்கரையில் உலகின் இரண்டாவது ஆழமான நீல துளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செத்துமால் விரிகுடாவில் அமைந்துள்ள நீருக்கடியில் அமைந்துள்ள இந்த குகை, ஏறக்குறைய 900 அடி ஆழம் கொண்டதாகவும் தெரிகிறது. தென் சீனக் கடலில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் ஆழமான அறியப்பட்ட நீல துளையை விட இந்த துளை 80 அல்லது அதற்கு மேற்பட்ட அடி குறைவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடல் உள்வாங்குவது போலான இந்த அமைப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது!

blueholecover

கடலில் காணப்படும் நீல துளைகள் என்றால் என்ன?

கடலுக்கு அடியில் காணப்படும் நீல துளைகள் என்பவை அளவில் மிக பெரியவை, கடலுக்கடியில் செங்குத்து குகைகள் அல்லது கடலோரப் பகுதிகளில் காணப்படும் மூழ்கும் குழிகளாகும். அவை பொதுவாக பவளப்பாறைகள், கடல் ஆமைகள் மற்றும் சுறாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளன. மேலிருந்து பார்ப்பதற்கும் மிகவும் அழகாக கண்ணைப் பறிக்கும் விதமாக உள்ளன.

எதனால் நீல துளைகள் உருவாகின்றன?

கடல் நீர் சுண்ணாம்புக் கல்லை சந்திக்கும் போது நீல துளைகள் உருவாகின்றன. சுண்ணாம்புக் கல் மிகவும் நுண்துளையாக இருப்பதால், தண்ணீரில் உள்ள இரசாயனங்கள் காலப்போக்கில் மெதுவாக சுண்ணாம்புக் கல்லை உண்ணும் போது, நீர் எளிதில் பாறையில் ஊடுருவுகிறது. இருப்பினும், நீல துளைகள், அவற்றை அணுகுவதற்கான சரியான வழிமுறைகள் இல்லாததால், விஞ்ஞானிகளால் போதுமான அளவு ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

worldsseconddeepestbluehole

பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நீல துளைகள்

நீல துளைகளில் உள்ள தனித்துவமான கடல் நீர் வேதியியல் அவை நிலத்தடி நீர் மற்றும் ஒருவேளை நீர்நிலைகளுடன் தொடர்பு கொள்ளலாம் என்று கூறுகிறது. நீல துளைகள் மிகக் குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் சூரிய ஒளி அவற்றின் மேற்பரப்பில் மட்டுமே பிரகாசிக்கிறது, ஆனால் இந்த காரணிகள் இருந்தபோதிலும், அவை குறைந்த ஆக்ஸிஜன் சூழலுக்குத் தழுவிய பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.

worldsseconddeepestbluehole

புதிதாக மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட நீல துளை

மாயன் மொழியில் "Taam ja" என்று அழைப்பாடும் இந்த தளம் ஆழமான நீர் என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது. மெக்சிகோவின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலால் (கோனாசிட்) ஒருங்கிணைக்கப்பட்ட பொது ஆராய்ச்சி மையமான எல் கொலேஜியோ டி லா ஃப்ரோன்டெரா சுர் (ஈகோசூர்) விஞ்ஞானிகள் முதன்முதலில் இந்த நீல துளையை கண்டுபிடித்தனர். 2021 ஆம் ஆண்டில் நீல துளை

கண்டுபிடிக்கப்பட்டாலும், அது சமீபத்தில் வரை ஆய்வு செய்யப்பட்டு ஃபிரான்டியர்ஸ் இன் மரைன் சயின்ஸ் என்ற அறிவியல் இதழில் ஆவணப்படுத்தப்பட்டது. ஸ்கூபா டைவர்ஸ், கடலுக்கடியில் சோனார் மற்றும் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதன் பின்னரே இதனைப் பற்றிய செய்திகள் வெளியே வந்துள்ளதாம்.

worldsseconddeepestbluehole

Taam ja பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

Taam ja', 147,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 80 டிகிரி கோணத்துடன் செங்குத்தான பக்க சரிவுகளைக் கொண்டுள்ளது, இது "பெரிய கூம்பு அமைப்பை" உருவாக்குகிறது. குகையின் வாய்ப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 15 அடிக்கு கீழே அமைந்துள்ளது. "TJBH (Taam ja' Blue Hole) இன் தோற்றம் மற்றும் புவியியல் பரிணாமம் மேலும் விசாரணைக்கு தகுதியானது" என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆக, நாளடைவில் நாம் இதனைப் பற்றிய நிறைய செய்திகளை காணலாம்!

More News

    Read more about: blue hole travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+