நிருத்ய கிராமத்தில் உள்ள பல்வேறு குருகுலங்களையும் ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர்.
கர்நாடகாவின் கலை மற்றும் கலாச்சார மையமாக திகழ்ந்து வரும் நிருத்ய கிராமத்தை 1990-ஆம் ஆண்டு, ஒடிசி கலைஞர் ப்ரோத்திமா கௌரி பேடி அவர்கள் நிர்மாணித்தார். இந்த கிராமம் ஒடிசி நடனத்துக்காக பெரிதும் அறியப்படுகிறது.
நிருத்ய கிராமத்தில் நிறைய மண் வீடுகளும், அழகிய கோயில்களும், சில விருந்தினர் இல்லங்களும் இருக்கின்றன. இது தவிர ஒரே ஒரு யோகா மையமும் இருக்கிறது.
நிருத்ய கிராமத்தில் ஒடிசி குருகுலம், மோகினிஆட்டம் குருகுலம் மற்றும் கதக் குருகுலம் ஆகியவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நடனங்களை தவிர பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக்களி மற்றும் மணிப்புரி போன்ற நடனங்களும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. இதற்கான வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்ற ரீதியில் பாரம்பரிய குரு, சிஷ்ய முறையில் நடத்தப்படும்.



Click it and Unblock the Notifications