Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழைய கோவா » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் அகஸ்டின் தேவாலயம்

செயின்ட் அகஸ்டின் தேவாலயம், பழைய கோவா

24

செயின்ட் அகஸ்டின் தேவாலயம் 46 மீட்டர் உயரத்தில், பழைய கோவாவில் உள்ள ஹோலி ஹில் என்ற குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் பாதிக்கு மேல் இன்று சிதைந்து போனாலும், இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேவாலயங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் இதன் சரித்திர முக்கியத்துவம் மற்றும் கட்டிடக் கலை சிறப்பின் காரணமாக ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

தேவாலயத்தின் வரலாறு

செயின்ட் அகஸ்டின் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி பன்னிரெண்டு அகஸ்தினியர்கள் ஒன்று சேர்ந்து இதை கட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெண் துறவியர் மாடம் ஒன்றும் தேவாலயத்துக்கு அருகே கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேவாலயத்தில் அற்புதமான ஆலயமணி ஒன்று கோபுர உச்சியில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த மணி சிறிது காலத்திற்கு பிறகு பனாஜியிலுள்ள 'அவர் லேடி ஆஃப் இமாக்குலேட் கான்செப்ஷன்' என்ற தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இன்றும் அவர் லேடி தேவாலயத்தில் நீங்கள் அந்த மணியை பார்க்கலாம்.

செயின்ட் அகஸ்டின் தேவாலயம் ஆரம்ப காலத்தில் நான்கு பூஜை மாடங்கள், எட்டு தொழுகை செய்யும் இடங்கள் மற்றும் ஒரு பெண் துறவியர் மாடத்தையும் கொண்டிருந்தது.

ஆனால் இன்றோ தேவாலயத்தின் கோபுரத்தையும், முன் பக்கத்தையும் தவிர பின்புற சுவர்களெல்லாம் சிதைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அப்படி இருந்த போதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேவாலயத்தை தேடி படை எடுத்து வருவது போல் ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேவாலயத்தை எப்படி அடைவது?

செயின்ட் அகஸ்டின் தேவாலயம் தெற்கு கோவாவில் அமைந்திருப்பதால் பனாஜி, வாஸ்கோ மற்றும் மார்கோ நகரங்களிலிருந்து கார், பேருந்து, ரிக்க்ஷா என்று எதன் மூலமாகவும் சுலபமாக தேவாலயத்தை அடைந்து விடலாம்.

மாறாக கேண்டலிம், பாகா, கலங்கூட் போன்ற வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவாலயத்துக்கு வரலாம். அல்லது உங்களிடம் சொந்த கார் இருந்தால் சிறப்பான பயண அனுபவமாக அது இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat

Near by City