Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழைய கோவா » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் கஜேட்டன் தேவாலயம்

செயின்ட் கஜேட்டன் தேவாலயம், பழைய கோவா

24

கோவாவில் எத்தனையோ தேவாலயங்கள் இருக்கின்றபோதும் செயின்ட் கஜேட்டன் தேவாலயத்தின் பேரழகுக்கு எதுவும் அருகில் கூட வர முடியாது. இந்த தேவாலயம் கொரிந்தியன் மற்றும் காத்திக் கட்டிடக் கலைகளின் பாதிப்பில் கட்டப்பட்டிருப்பதால் ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள் போலவே பார்வைக்கு தெரியும்.

இதன் புராதன வெண்ணிறத் தோற்றத்திலிருந்து, முன்புறம் இருக்கும் இரண்டு செவ்வக கோபுரங்கள் வரை அனைத்துமே ஐரோப்பிய கட்டிடக் கலைகளை நமக்கு ஞாபகப்படுத்தும்.

செயின்ட் கஜேட்டன் தேவாலயம் அடிப்படையில் இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தை பார்த்து வடிவமைக்கபட்டு, செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

அதோடு உலகம் சுற்றும் பயணிகளுக்கு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள தேவாலயங்களுக்கும், செயின்ட் கஜேட்டன் தேவாலயத்துக்கும் உள்ள ஒற்றுமை நன்றாக புலப்படும்.இதற்கு காரணம் செயின்ட் கஜேட்டன் தேவாலயத்தின் கட்டிடக்கலை கோட்பாடுகள் அந்த தேவாலயங்களோடு பெருமளவு ஒத்துப்போவதாய் உள்ளன.

தேவாலயத்தின் உட்புறத் தோற்றம்

செயின்ட் கஜேட்டன் தேவாலயத்தின் உட்பகுதிகள் கொரிந்தியன் மற்றும் பரோக்கி கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இடது பக்கத்தில் ஏராளமான பூஜை மாடங்களும், வலது பக்கத்தில் பெரிய பெரிய தூண்களால் பிரிக்கப்பட்ட திருச்சிறையும் அமையப்பெற்றிருக்கின்றன.

இதில் இடப்புறம் உள்ள பூஜை மாடங்கள் அனைத்தும் அவர் லேடி ஆப் பியெட்டி மற்றும் செயின்ட் கிளேர் புனித குடும்பங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அதேபோல் வலப்புறம் உள்ள பூஜை மாடங்கள் செயின்ட் கஜேட்டன், செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் ஏக்னசுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் செயின்ட் கஜேட்டனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் அலங்கார மரபீடம் மற்ற பூஜை மாடங்களை விட அளவில் மிகவும் பெரியது.

மேலும் இந்த பூஜை மாடங்களில் காணப்படும் இத்தாலிய ஓவியங்கள் செயின்ட் கஜேட்டனின் வாழ்கையை நமக்கு எடுத்து சொல்லும் விதமாக தீட்டப்பட்டுள்ளன. இது திவிர தேவாலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என்று எங்கிருந்து பார்த்தாலும் தேவாலயத்தின் விதானம் அதனுடைய அழகில் நம்மை சொக்க வைத்து விடும்.

தேவாலயத்தினுள் அமைந்திருக்கும் கிணறு

செயின்ட் கஜேட்டன் தேவாலய வளாகத்தினுள் கிணறு ஒன்று இருக்கிறது. இந்த கிணறு போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றும் முன்பு, இப்பகுதியில் இருந்த ஹிந்து கோயிலுக்கு சரித்திர ஆதாரமாக நிலைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் துறையினரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கருத்துக்கு மாறாக இந்த கிணறு கட்டிடத்தின் ஸ்திரத் தன்மையை பாதுகாக்க உருவாக்கப்பட்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர். இது தவிர இங்கு காணப்படும் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இந்த சர்ச்சைகளுக்கு தூபம் போடும் விதமாக இருந்து வருகின்றன.

தேவாலயத்தை எப்படி அடைவது?

செயின்ட் கஜேட்டன் தேவாலயம் பனாஜியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பழைய கோவா பகுதிகளில் அமைந்திருக்கிறது. அதோடு பனாஜி, வாஸ்கோ, மார்கோ உள்ளிட்ட அனைத்து தெற்கு கோவா பகுதிகளிருந்தும் பழைய கோவாவுக்கு வாடகை கார்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

ஆனால் சாகச அனுபவத்தை பெற விரும்புவர்கள் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவாலயத்துக்கு பயணிப்பதுதான் சிறப்பானதாக இருக்கும்.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed

Near by City