பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது.
இந்தப் பூங்கா 1847ல், ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கிரஹாம் மெக்இவோர் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதுவும் மாதத்திற்கு ரூ.3 கட்டணத்தில், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.
பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications