முகப்பு » சேரும் இடங்கள் » ஊட்டி » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஊட்டி ஷாப்பிங்

  ஊட்டி ஷாப்பிங்

  ஊட்டியில் ஷாப்பிங் பிரபலமானது என்றாலும் எந்த சிறப்பு கைவினை பொருட்களும் இல்லாதது சில மக்களுக்கு ஏமாற்றம் தரும்.

  ஷாப்பிங் ஆர்வலர்கள் ஊட்டியில் பல்வேறு பொருட்களை வாங்கலாம். இங்கு கிடைக்கும் தேயிலை மற்றும் காபி அற்புதமானது. நீங்கள் தேர்வு செய்ய பல விதங்கள் உள்ளன.

  ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் வாங்காமல் வருவது ஒரு குற்றம் போன்றது. தேயிலையில் தேன், யூகலிப்டஸ், துளசி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை ஆப்பிள் மற்றும் பல வகைகள் இங்கு கிடைக்கும்.

  வீட்டில் செய்யப்படும் சாக்லேட் கூட இங்கு கிடைக்கும். டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள் சாக்லேட், சுவை சாக்லேட் மற்றும் மிட்டாய்களில் இருந்து தயாராகும் சாக்லேட் போன்றவற்றை விற்கும் பல கடைகள் உள்ளன.

  தோடர் பாணி பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் உள்ளன.

  + மேலும் படிக்க
 • 02பைக்காரா ஏரி

  பைக்காரா ஏரி

  முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் உள்ளது.

  நீலகிரி மாவட்டத்தின் இந்த பெரிய ஏரியை தோடர்கள் மிகவும் புனிதமாக கருதினர். வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி , இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது.

  முக்கிய சாலையில் உள்ள ஒரு பாலம், புகைப்படங்கள் எடுக்க ஒரு சிறந்த இடம். பைக்காரா நதியில் ஒரு அணையும் மின் உற்பத்தி நிலையமும் உள்ளன.

  நேரம்: 8.30 AM - 5.00 PM

  நுழைவு கட்டணம்: இல்லை (ஏரி), படகு சவாரி செய்ய ரூ.550

  + மேலும் படிக்க
 • 03மலர் கண்காட்சி

  மலர் கண்காட்சி

  ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர்.

  150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும்.

  இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 04க்ளென்மார்கன்

  க்ளென்மார்கன்

  க்ளென்மார்கன் - ஊட்டியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கண்ணுக்கினிய கிராமம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. கிராமத்தில் சிறப்பு தேயிலை தோட்டங்கள் உள்ளன.

  க்ளென்மார்கன் கிராமத்தில் ஒரு பிரபலமான ஈர்ப்பு மின் நிலையத்திலிருந்து (சிங்காராவில் அமைந்துள்ளது) கிராமத்திற்கு செல்லும் ஒரு கயிற்றுப்பாதை. 3 கி.மீ. நீண்டுள்ள இந்தக் கயிற்றுப்பாதை 980 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

  இது ஜேர்மன் பாயிண்ட் என அழைக்கப்படும் பகுதியில் 41 டிகிரி சாய்வுடன் உள்ளது. இந்த சாய்வின் காரணமாக இதில் போக்குவரத்துக் கடினமாக இருக்கும். மின் நிலையத்தில் பணி செய்பவர்கள் இதைப் பயன்படுத்துவர்.

  தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த அற்புதமான காட்சியால் இந்த இடம், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

  + மேலும் படிக்க
 • 05பொடானிக்கல் கார்டன்

  பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது.

  இந்தப் பூங்கா 1847ல், ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கிரஹாம் மெக்இவோர் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதுவும் மாதத்திற்கு ரூ.3 கட்டணத்தில், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

  இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன.

  பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

  + மேலும் படிக்க
 • 06ஊட்டி ஏரி

  ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. இந்த செயற்கை ஏரி 1824ல், 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது.

  மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்மட்டம் ஏரியின் அளவைக் கடந்ததால், மூன்று முறை நீர் வெளியேற்றப்பட்டது.

  உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக்க உதவுவதற்காக இந்த ஏரி அமைக்கப்பட்டது. பல்வேறு புவியியல் காரணங்களாலும் பஸ் ஸ்டாண்ட், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஏரிப்பூங்கா போன்றவற்றாலும் ஏரி அதன் உண்மையான அளவில் இருந்து இன்று சுருங்கி விட்டது.

  ஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

  + மேலும் படிக்க
 • 07மகர பொங்கல்

  மகர பொங்கல்

  மகர பொங்கல் தமிழ்நாடு முழுவதும் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். ஜனவரி மாதம் 12 முதல் 15 ஆம் தேதி வரை, இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

  இந்தத் திருவிழா, கொண்டாடுபவர்களின் வாழ்வில் வளம் மற்றும் செல்வத்தை தரும் என்று நம்பப்படுகிறது. பயிர்கள் வளர உதவி செய்யும் சூரியனுக்கும் வருண பகவானுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த விழா கொண்டாடப்படுகிறது.

  இந்துக்கள் தங்கள் வீடுகளை பூக்களால் அலங்கரித்து, வாசலில் மலரிதழ்கள் மற்றும் வண்ணாப்பொடிகளைப் பயன்படுத்தி ரங்கோலி போடுகின்றனர் . பால், அரிசி மற்றும் வெல்லம் பயன்படுத்திச் செய்யப்படும் சர்கரைப் பொங்கல் என்ற சிறப்பு இனிப்பை, மகர பொங்கல் தினத்தன்று அனைவரும் உண்டு மகிழ்கிறார்கள்.

  + மேலும் படிக்க
 • 08முக்கூர்த்தி

  முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது.

  இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது.

  முக்கூர்த்தி தேசிய பூங்கா சில பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த ஏற்றங்கள் 4.900 அடி முதல் 8.625 அடி வரை வேறுபடுகின்றன. பூங்காவில் உள்ள பிரபலமான சிகரங்கள் - கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம். இந்த மூன்று சிகரங்களும் பூங்காவில் உயர்ந்துள்ளன. சிகரங்களின் சிறப்பு அவற்றில் உள்ள கிரானைட் பாறைகள்.

  நீங்கள் தேசிய பூங்காவில் காலார நடந்து சென்றால் முக்கூர்த்தி அணையைக் காணலாம் . இந்த அணை க்ளென்மார்கன் என்ற கிராமத்திற்கு அருகே, பைக்கரா மின்சார திட்டத்தின் ஒரு துணை பிரிவு ஆகும்.

  + மேலும் படிக்க
 • 09பனிச்சரிவு ஏரி

  நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.

  சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.

  சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.

  சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 10வென்லாக் டவுன்ஸ்

  வென்லாக் டவுன்ஸ்

  வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.

  சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான்.

  சுதந்திர இந்தியாவில் வேட்டை தடை செய்யப்பட்ட பின், இது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆனது. இப்போது இந்த இடத்தில் கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் உள்ளது.

  + மேலும் படிக்க
 • 11தொட்டபெட்டா

  தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது.

  தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.

  இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

  வருகையை இன்னும் சுவாரசியமாக்க, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed