Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலமு » ஈர்க்கும் இடங்கள் » பலமு புலிகள் சரணாலயம்

பலமு புலிகள் சரணாலயம், பலமு

9

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே புலிகள் சரணாலயம் இந்த பலமு புலிகள் சரணாலயம் மட்டுமே. மேலும் இது நாட்டில் உள்ள ஒன்பது முதன்மையான புலிகள் சரணாலயத்தில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்த சரணாலயம் சுமார் 1,014 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் மைய பகுதி மட்டுமே சுமார் 414 சதுர கி.மீ. அளவிற்கு பரந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுமார் 600 சதுர கி.மீ. அளவிற்கு விரிந்துள்ளது.

இந்தச் சரணாலயத்தில் ராமன்டாக், லட்டூ, குகுரும் போன்ற சில வன கிராமங்களும் உள்ளன. இந்தப் பகுதி 1973 ம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே புலிகள் காணப்படுகின்றன. 2012-ம் ஆண்டின் இங்கு ஒரே ஒரு ஆண் புலியும் ஐந்து பெண் புலிகள் மட்டுமே இருந்தன.

பலமு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1947-ஆம் ஆண்டில் இந்திய வன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனமாக  அறிவிக்கப்பட்டது. இங்கு நீங்கள் புலிகளை தவிர்த்து,  யானை, சிறுத்தை, காட்டெருமை, சாம்பார் மற்றும் காட்டு நாய்கள் போன்ற மற்ற விலங்குகளையும் காணலாம்.

சாகசத்தை விரும்பும் பயணிகளூக்கு இந்த காடு அழகான நீர் வீழ்ச்சிகள், மலை சரிவுகள், இலையுதிர் புல்வெளிகள், போன்றவற்றை வழங்குகின்றது. இந்தப் பகுதியில் முர்ஹு, ஹுலுக், குல்குல், மற்றும் நெதர்ஹத் போன்ற மிக முக்கியமான மலைகளும் இருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri