Search
  • Follow NativePlanet
Share

பலமு - இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு...

9

பலமுவில் உள்ள வளமான நிலங்கள் மற்றும் வனவிலங்குகள் இயற்கை காதலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த மாவட்டத்தின் தலைநகராக டால்டொன்கஞ்ச் விளங்குகின்றது. இப்பகுதியில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது. இந்த இடத்தின் கண்ணுக்கினிய அழகிய காட்சியானது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

இந்தப் பகுதியில் கோல் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான ஔரங்கா மற்றும் அமனத் போன்றவை பாய்கின்றன. மேலும் இங்கு சிறு நீரோடைகள் பாறைகளின் வழியே பாய்ந்து ஓடுகின்றன. ஆகவே இந்தப் பகுதி மிகவும் செழிப்பாகக் காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் சல் மற்றும் மூங்கில் மரங்கள் செழித்து வளருகின்றன.

பலமு, வன மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மற்றும் மலையேறுபவர்கள் வாகன ஓட்டிகளுக்கு இந்தப் பகுதியை ஆராய்வதற்கான ஒரு உன்னத வாய்ப்பை வழங்குகின்றது. இங்கு பல்வேறு காட்டு பங்களாக்கள் மற்றும்  சரியான முகாம் அமைக்கும் தளம் போன்றவையும் உள்ளன.

பலமு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பலமு புலிகள் சரணாலயம் மற்றும் பிட்லா தேசிய பூங்கா போன்றவை இங்குள்ள இரண்டு முக்கிய வன விலங்கு சரணாலயம் ஆகும். இவை இரண்டும் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன.

எனவே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள பலமு கோட்டை கடந்த கால அரசர்களின் கதைகளை சொல்கிறது. மேலும் இங்கு பல்வேறு வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.

பலமுவை எவ்வாறு அடைவது?

பலமு, இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

பலமு  வானிலை

பலமு, கோடைகாலத்தில் மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையையும், குளிர்காலத்தில் மிகவும் குளிரான வானிலையையும் பெற்றிருக்கின்றது.

பலமு சிறப்பு

பலமு வானிலை

சிறந்த காலநிலை பலமு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பலமு

  • சாலை வழியாக
    பலமு, சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பலமுக்கு எண்ணற்ற பேருந்துகள் அருகில் உள்ள நகரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பலமுக்கு மிக அருகில் டால்டொன்கஞ் ரயில் நிலையம் உள்ளது. அதற்கு அடுத்ததாக ராஞ்சி ரயில் நிலையம் அருகாமையில் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பலமுக்கு மிக அருகில் ராஞ்சி விமான நிலையம் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed

Near by City