Search
  • Follow NativePlanet
Share

பண்ணா - வைர நகரம்!

12

மத்திய பிரதேச மாநிலத்தில், புகழ்பெற்ற வைரச் சுரங்கங்களைக் கொண்ட நகரம் பண்ணா. இந்த வைரங்கள், உலகத் தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டாலும், இதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒவ்வொரு மாத இறுதியிலும், மாவட்ட நீதிபதி முன்பாக இந்த வைரங்கள் ஏலம் விடப்படுகின்றன. மேலும், இது ஒரு சிறந்த ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. தன்னை அறிந்து சுய விழிப்பு நிலை அடைதல் குறித்து மஹாமதி பிரன்னாத் அவர்கள் போதனை செய்த இடம் பண்ணா. மேலும், இங்கு தான் அவர் ஜகனி கொடியையும் தோற்றுவித்தார். 11 வருடங்கள் தன் சிஷ்யர்களுடன் வாழ்வைக் கழித்த மஹாமதி அவர்கள், பண்ணா நகரில் ஜீவ சமாதி அடைந்தார்.

பண்ணாவை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பண்ணா நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலம் பண்ணா தேசியப் வன விலங்குப் பூங்கா. இது தவிர பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவருகின்றன.

இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்கள், பண்ணா நகரத்திற்கு வந்து, இங்குள்ள பூங்காக்கள், வன விலங்குகள் பறவைகள் மற்றும் பல இயற்கை சூழல்களை கண்டு ரசிக்கலாம்.

பண்ணா - புலிகளின் சரணாலயம்!

பண்ணா தேசியப் பூங்கா, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளைக் காணலாம். கஜூரஹோவிற்கு அருகில் இந்தப் பூங்கா அமைந்திருக்கிறது. இதனைச் சுற்றி பல்வேறு கேளிக்கை விடுதிகளும், தங்கும் இடங்களும் உள்ளன.

பண்ணாவை அடைவது எப்படி?

ரயில், பேருந்து மூலமாக பண்ணா நகரத்தைல் எளிதில் அடையலாம்.

பண்ணாவின் வானிலை

பண்ணா நகரின் கோடை காலத்தில் வெயில் அதிகமாக உணரப்படும். ஆனால் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் குறைந்து சுற்றிப் பார்ப்பது ஏதுவாக இருக்கும்.

பண்ணா சிறப்பு

பண்ணா வானிலை

சிறந்த காலநிலை பண்ணா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பண்ணா

  • சாலை வழியாக
    தில்லி, ஆக்ரா, ஜான்சி, லக்னோ, ஃபரிதாபாத், வாரணாசி, ஜபல்பூர், அலகாபாத், தோல்பூர், இந்தோர், போபால் போன்ற நகரங்களில் இருந்து பல சொகுசுப் பேருந்துகள் பண்ணாவிற்கு செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், சாலை வழியாக பண்ணா செல்வது எளிதாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பண்ணாவில் ரயில் நிலையம் இல்லை. சுமார் 45 கிமீ தொலைவில் கஜூரஹோ ரயில் நிலையமும், 75 கிமீ தொலைவில் சத்னா ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இங்கிருந்து பண்ணாவிற்கு செல்ல பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் இருக்கும் கார் சேவையைப் பயன்படுத்தியும் பண்ணா நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பண்ணா விமான நிலையம் தற்போது உபயோகத்தில் இல்லை. ஆகையால், 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் கஜூராஹோ விமான நிலையம் அடைந்து, அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் பண்ணா நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City