மஷ்ரு நெசவாளர்கள் என்ற மற்றொரு சமுதாயத்தினர் தனித்துவம் வாய்ந்த முறையில் பட்டு மற்றும் பருத்தியை பயன்படுத்தி ஆடைகளை நெய்கின்றனர். ஆடைகளின் வெளிப்புறம் பட்டால் நெய்யப்படும். ஆடைகளின் உட்புறம் பருத்தியினால் நெய்யப்படும்.
இவர்கள் பயன்படுத்தும் நெய்தல் முறை முன்னொரு காலத்தில் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இப்போது வெகு சில இடத்திலேயே இவை பின்பற்றப்படுகிறது.
இது ஹிந்து மதத்தினரால் உபயோகப்படுத்தப்பட்டாலும், இஸ்லாமிய மக்கள் தூய்மையான பட்டாடையை பயன்படுத்தக்கூடாது என்பதால் அவர்களிடம் இந்த முறை புகழ் பெற்று இருந்தது. மஷ்ரு என்ற வார்த்தைக்கு 'அனுமத்திகப்பட்டது' என்ற அர்த்தமாகும்.



Click it and Unblock the Notifications