பதான்கோட் விமான நிலையத்தை பெரும்பாலும் நம் இந்திய வான் படை விமான தளமாக பயன்படுத்துகிறது. இருப்பினும் டெல்லி மற்றும் குல்லுவிலிருந்து மக்கள் சேவைக்காக சில விமானங்களும் இங்கே இயக்கப்படுகின்றன. பதான்கோட்டிற்கு மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் இங்கிருந்து 108 கி.மீ. தொலைவில் உள்ள அம்ரித்சரில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து இந்நகரத்தை பேருந்து அல்லது டாக்சி மூலமாக வந்தடையலாம்.