அகம்குவான், பாட்னா

“புதிர் நிறைந்த கிணறு” என்ற அர்த்தத்தை தன் பெயரில் கொண்டுள்ள அகம்குவான், அபரிமிதமான வரலாற்று சிறப்பைக் கொண்டுள்ளது. மௌரியப் பேரரசரான அசோகா காலத்தைச் சேர்ந்த இது, பாட்னாவின் மிகப் பழமையான தொல்பொருளியல் ஸ்தலங்களுள் ஒன்றாகும்.

இக்கிணற்றைப் பற்றிய ஏராளமான கட்டுக்கதைகள் உலவி வருகின்றன. சில கதைகள் இதனை தண்டனை நிறைவேற்றப்படும் ஒரு இடமாகவும், சில கதைகள் அரியணையை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் அசோகா மன்னர் தன் சகோதரர்களை இதனுள் பிடித்துத் தள்ளியதாகவும் சித்திரிக்கின்றன.

இந்த இடத்துக்கு அருகாமையில் தான் பெரியம்மை மற்றும் சின்னம்மை ஆகிய நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாக நம்பப்படும் ஷித்தாலா தேவி கோயில் அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...