குருத்வாரா பால் லீலா மைனி என்பது மன்னர் ஃபதே சந்த் மைனி அவர்கள் வசித்து வந்த இல்லமாகும். இளவயது குரு கோவிந்த் சிங், குழந்தையின்மையால் பெரும் துயருற்றிருந்த இராணியைச் சந்தித்து ஆன்மீகத்தின் மூலம் அவருக்கு ஆறுதல் அளித்தார்.
இந்த சேவைக்காக இராணி அவருக்கு வேகவைத்து, உப்பிட்ட பயிறை உண்ணக் கொடுத்தார். இப்போதும் குருத்வாராவில் அது போன்றே தயாரிக்கப்பட்ட பயிறு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
பழங்காலத்தைச் சேர்ந்ததான முன் கதவில் காணப்படும் மர செதுக்கல் 1668 ஆம் வருடத்தைச் சேர்ந்ததாகும். ஆனால் சந்நிதி மற்றும் கோயிலின் இதரப் பகுதிகளை உள்ளடக்கிய உள் வளாக அரங்கங்கள் சமீப காலங்களில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



Click it and Unblock the Notifications