பாட்னா விலங்குக் காட்சிசாலை, பாட்னா

முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னா » ஈர்க்கும் இடங்கள் » பாட்னா விலங்குக் காட்சிசாலை

பாட்னா விலங்குக் காட்சிசாலை அல்லது சஞ்சய் காந்தி ஜெய்விக் உத்யான், பெய்லி சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. பாட்னா விலங்குக் காட்சிசாலை, அருகி வரும் உயிரின வகைகளை பாதுகாப்பதற்காக குறிப்பிடத்தக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு, சிறைபிடித்து பின் இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளது.   

தற்போது இந்த விலங்குக் காட்சிசாலை புலி, சிறுத்தை, பலதிறப்பட்ட புள்ளிகள் கொண்ட சிறுத்தை, நீர் யானை, முதலை, யானைகள், இமாலய கருங்கரடி போன்ற சுமார் 110 வகைகளைச் சேர்ந்த சுமார் 800 விலங்குகளின் வசிப்பிடமாகத் திகழ்கிறது.

இந்த விலங்குக் காட்சிசாலை முதலில் ஒரு தாவரவியல் பூங்காவாக உருவாக்கப்பட்ட காரணத்தினால் இங்கு 300 வகைகளுக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் செடி கொடிகள் காணப்படுகின்றன.

இந்த பூங்காவில் காணப்படும் மீன் காட்சியகத்தில் சுமார் 35 வகை மீன்களும், பாம்பு இல்லத்தில் 5 வகைகளைச் சேர்ந்த சுமார் 32 பாம்புகளும் காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...