3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் பாஹீ கோட்டை மற்றும் கோவில் ஆகியவை நாட்டிலேயே மிகவும் பழமையானதாக கருதப்படுகின்றன. இந்த கோவில் தாவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இந்து மதத்தின் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்படும் காளி தேவி, பாவே வாலி மாதாவாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலை ராஜா பாஹீலோச்சன் என்பவர் கட்டியதாகவும், பின்னர் டோக்ரா ஆட்சியாளர்கள் புனரமைப்பு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வாரத்தின் எந்த நாட்களிலும் வர முடியுமென்றாலும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் புனிதமான நாட்களாக கருதப்படுகின்றன.
பாஹு கோட்டையின் முகலாய தோட்டங்களின் சுற்றுச்சூழலை ஒட்டியவாறு இருக்கும் கண்கவரும் பூங்காவான பாவே-கி-பாஹீ ஜம்முவின் நெடிய, அழகிய காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்ற இடமாகும். இந்த பூங்கா சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற தலமாகும்.



Click it and Unblock the Notifications