பெக் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமத்திற்கு மேற்கொள்ளும் பயணம் சுற்றுலா பயணிகள் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்றாக இருக்கும். கஹ்ஹஹினோ கிராமம் வரலாறு மற்றும் இதிகாசம் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு பழம்பெரும் கிராமம் ஆகும்.
இந்த கிராமமே பல நாகா பழங்குடியினரின் பூர்வீக இடம் என நம்பப்படுகிறது. இங்கிருந்தே நாகா பழங்குடியிர் மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு நிழவும் மற்றொரு நம்பிக்கையின் படி, இங்குள்ள ஒரு கல் பலகையின் மீது உலர்த்தப்படும் நெல் அதிசயத்தக்க வகையில் பலமடங்காக பெருகி விடுகிறது.
அந்தக் கல் இன்றும் காணப்பட்டாலும், அதன் மந்திர சக்தி காணாமல் போய் விட்டது. சுற்றுலா பயணிகள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள டாபுபி அல்லது பெக் மாவட்டத்தில் ஃபுட்ஸெரொ வில் இருந்து கஹ்ஹஹினோ கிராமத்தை அடைய முடியும்.
சாலைகள் மூலம் கஹ்ஹஹினோவை எளிதாக அடையலாம். மேலே கூறிய நகரங்களில் இருந்து டாக்சிகள் மூலம் இந்த கிராமத்தை எளிதாக அடைய முடிவதால், இந்த கிராமத்திற்கு சாலைகளே உயிர்நாடி போல் விளங்குகின்றன.
கஹ்ஹஹினோ, மாவட்ட தலைநகரான பெக்-இல் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் ஃபுட்ஸெரொ தாலுகாவில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications