பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில் உள்ளது.
ஸில்லியோ ஏரி உள்ளூர் மக்களால் லாட்ஸம் என அழைக்கப்படுகிறது. ஏரி அமைந்துள்ள மனதை மயக்கும் இடம், நம்முடைய பயணத்தை பயனுள்ளதாக செய்கிறது. மியான்மர் எல்லையில் அமைந்துள்ள பட்கை சரிவுகள் வரை உள்ள இந்த ஏரி 0.25 முதல் 0.30 சதுர கி.மீ. பரப்பளவுடையது. இந்த ஏரியின் ஆழம் 4 மீட்டர் ஆகும்.
ஒரு பழைய, வியப்பு மிகுந்த கதை உள்ளூர் மக்களால் இந்த ஏரியைப் பற்றி சொல்லப்படுகிறது. அந்த கதை இந்த ஏரியின் புகழை மங்கச் செய்கிறது. அந்த வாய் வழிக் கதையின் படி, ஒரு ஜோடி மர்மமான முறையில் இந்த ஏரியின் அருகே தங்கள் பெண் குழந்தையை இழந்து விட்டது.
அவர்கள் எவ்வளவோ முயற்சி போதிலும் ஏரியின் மையத்தில் இருந்து அவளை திரும்ப பெற முடியவில்லை. அதன் பின் அந்த இளம் பெண் ஏரி ராணி ஆனதாக நம்பப்படுகிறது.
மக்கள் அந்த இளம் பெண்ணை லாட்ஸம் என அழைக்கின்றனர். அதன் பின்னர் இந்த ஏரி இன்றும் குடிநீருக்காகவோ, பாசனத்திற்கோ அல்லது மீன்பிடிக்கவோ பயன்படுத்தப்படவில்லை.



Click it and Unblock the Notifications